Wednesday, March 12, 2025

“முஸ்லிம் ஆண்கள் தார்ப்பாயால் செய்யப்பட்ட ‘ஹிஜாப்’ அணியலாம்” – பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வருவதால் பிரச்சனைகள் எழக்கூடாது என்பதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள மசூதிகள் தொழுகை நேரத்தை பகல் 2 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் ரகுராஜ் சிங், ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது. வண்ணப்பொடி தூவுபவர்களை குறிப்பிட்ட முறையில் வீசுமாறு கூற முடியாது.

வண்ணப்பொடி பிடிக்காதவர்கள் அன்றைய தினம், முஸ்லிம் பெண்கள் ‘ஹிஜாப்’ அணிவதுபோல், முஸ்லிம் ஆண்கள் தார்ப்பாயால் செய்யப்பட்ட ‘ஹிஜாப்’ அணியலாம். அப்படி அணிந்துகொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லலாம். எளிதாக தொழுகை நடத்தலாம். இந்துக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். ரகுராஜ் சிங்கின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Latest news