Saturday, August 30, 2025
HTML tutorial

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம் ஜூலை 19 சனிக்கிழமை இரவு அடிலெய்டில் உள்ள கிந்தோர் அவென்யூவில் நடந்துள்ளது.

23 வயதான சரண்ப்ரீத் சிங் அவரது மனைவியும் காரில் சென்ற போது ஐந்து பேர் கொண்ட கும்பல் சரண்ப்ரீத்தை காரில் இருந்து இழுத்து சாலையில் தள்ளி அவர்கள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்தியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர் தாக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News