பிரமிடு… இன்ட்ரஸ்ட்டிங் தகவல்கள்

307
Advertisement
 1. நினைவுச்சின்னங்களை அமைப்பதற்காகப் பிரமிடுகள் உருவாக்கப்பட்டன.
 2. நைல் ஆற்றங்கரையோரம் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகைப் பிரமிடுகள்
  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை.
 3. எகிப்து நாட்டின் தச்சூர் நகரிலுள்ள சிவப்பு நிற பிரமிடுதான் உலகின் முதல் பிரமிடு.
 4. பின்னர், மன்னர் கூபுவின் பிரமிடும் மிகப்பெரிய வடிவில் அமைக்கப்பட்டது. பழைய
  ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக இன்றும் விளங்குவது கூபுவின் பிரமிடுதான்.
 5. சுண்ணக்கல்லால் ஆனது கூபுவின் பிரமிடு. இந்த சுண்ணக்கல் ஒருவிதப் படிவப்பாறை.
  இது பழுப்பு மற்றும் சாம்பல் நிறம்கொண்டது.
 6. பிரமிடின் உள்ளறைகள் சிவப்புக் கிரானைட் கற்களால் ஆனது.
 7. பெரி பிரமிடே உலகின் மிக உயரமான பிரமிடு. இதன் உயரம் 146.5மீட்டர். அதாவது,
  488 அடி. சதுர வடிவிலுள்ள இந்தப் பிரமிடின் அகலம் 230 மீட்டர். அதாவது, 755 அடி.
 8. பெரி பிரமிடு இரண்டரை டன்னிலிருந்து 15 டன் எடையுள்ள 13 லட்சம் கற்களைக்
  கொண்டு 13 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
 9. சூடான் நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் பிரமிடுகள் உள்ளன. 220 பிரமிடுகள்
  இந்நாட்டில் உள்ளன.
 10. நைஜீரியா, கிரீஷ், இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் பிரமிடுகள் உள்ளன.
 11. தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் ஐராவதேஸ்வரர்
  கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்களின் அமைப்பு பிரமிடைப்போல் உள்ளன.