Sunday, December 22, 2024

வசூலில் வேட்டை நடத்தும் புஷ்பா 2…. ஆறு நாட்களில் இத்தனை கோடியா..!!

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான திரைப்படம் புஷ்பா 1. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 5ம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது.

படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.200 கோடியை தாண்டி வசூல் செய்தது. தற்போது 6 நாட்கள் ஆன நிலையில் இதுவரை ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest news