பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தரம்சாலாவில் வரும் மே 11ம் தேதி நடைபெற இருந்த மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தரம்சாலாவுக்கு பதிலாக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.