மராட்டிய மாநிலம் புனேவில் வகோலி என்ற இடத்தில் சாலையோரம் கட்டுமானத் தொழிலாளர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.