Thursday, May 29, 2025

புல்வாமா தாக்குதல் : 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று

புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில், இந்திய துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த பேருந்து மீது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news