புதுச்சேரியில் 6 புதிய மதுபான தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி நேற்று ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்ட அறிவிப்புகள் இடம் பெற்றன.
இந்நிலையில் புதுச்சேரியில் 6 புதிய மதுபான தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய மதுபான ஆலைகள் மூலம் ரூ.500 கோடி வருவாய், 5,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.