செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சி பறவைகள் சரணாலயத்திற்கு மிகவும் பெயர்பற்ற சுற்றுலா தளமாகும். இந்த ஊராட்சியில் முக்கிய பிரதான சாலையாக இருந்து வரக்கூடிய வேடந்தாங்கலில் இருந்து தண்டரப்பேட்டை செல்லும் இணைப்பு சாலை
பல ஆண்டுகளாக மிகவும் சேதம் அடைந்து குண்டு குழியுமாக காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடனடியாக இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலையை சீர் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.