பள்ளி, கல்லூரிகள், அலுவலகம், குடும்பம், நண்பர்கள் குழு என எல்லா வட்டங்களிலும் எப்போதும், எல்லா நிகழ்வுகளுக்கும் தாமதமாக வரும் சிலரை பார்த்திருப்போம். ஏன், அது நாமாகவே கூட இருக்கலாம்.
இப்படிப்பட்டவர்களை மற்றவர்கள் பொறுப்பற்றவர்கள் எனவும் சோம்பேறிகள் என்றும் எளிதில் அடையாளப்படுத்தி விடுவார்கள்.
ஆனால், ஒருவரின் Time Management அவரின் உளவியல் கட்டமைப்பை சார்ந்தே வெளிப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 2014ஆம் ஆண்டு YouGov என்ற உலகளாவிய பொது கருத்து மற்றும் தரவு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஐந்தில் ஒரு அமெரிக்கர் வாரத்தில் ஒரு முறையாவது officeக்கு தாமதமாக செல்வது தெரியவந்துள்ளது.
அதே போல, 2016ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உளவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில், மக்கள் நேரத்தை அணுகுவதில் time based prospective memory என்ற அம்சம் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இதன் அடிப்படையில் மக்கள் நேரத்தை வேகமாகவோ அல்லது மெதுவாகவோ உணர்வதாக விளக்கம் அளித்துள்ளனர்.
உளவியல் கட்டமைப்பின் படி ஒரு பாதி மக்கள் Time Keepers ஆகவும், மீதியானவர்கள் Time Benders ஆகவும் இருக்கின்றனர். Time keepersஆல் இயல்பாக நேர மேலாண்மை செய்ய முடிவதாகவும், Time Benders அவர்களுக்கு அதிக ஈடுபாடுள்ள நிகழ்வுகளுக்கு மட்டுமே நேரத்திற்கு செல்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவ்வப்போது நேரத்தை கடைபிடிக்க முடியாமல் routine வேலைகளில் சொதப்புபவர்கள் Time Benders எனவும், எப்போதுமே எல்லா நிகழ்வுகளுக்கும் தாமதமாக வருகிறவர்கள் Punctually challenged என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், முறையாக திட்டமிட்டு, மனதை ஒருமுகப்படுத்தி நேரத்தை கடைபிடிக்க பழக்கப்படுத்தி கொண்டால், Time Benders மற்றும் Punctually Challenged நபர்களுக்கும் நேர மேலாண்மை சாத்தியம் என்பதே உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.