குழந்தைகளுக்கும் வங்கிக் கடன் தர்றாங்க

317
Advertisement

சிறுவர்களுக்கும் வங்கிக் கடன் தரும் தகவல் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில்தான் இந்த வியப்பான தகவல் கொடிகட்டிப் பறக்கிறது.

அங்குள்ள திருமணமானத் தம்பதிகளுக்கு 2 அல்லது 3 குழந்தைகள் இருந்தால், அந்தக் குழந்தைகளின் பெயரில் 2 லட்சம் யுவான் வங்கிக் கடன் தரப்படுகிறது. இது 31 ஆயிரத்து 400 அமெரிக்க டாலருக்குச் சமமாகும்.

இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ள தம்பதிகள் தொடங்கும் சிறுவணிகத்துக்காக இந்த வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. சில வகை வியாபாரங்களுக்கு வரி விலக்கு மற்றும் மதிப்புக் கூட்டு வரி ரத்து ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வடகிழக்கு மாகாணங்களான ஜிலின், லியோனிங், ஹெய்லாங்ஜியாங் ஆகிய மாகாணங்களிலுள்ள மக்கள் வேலைவாய்ப்புக்காகத் தங்கள் பகுதியைவிட்டுத் தொலைதூர இடங்களுக்குச் சென்று வருகின்றனர். இதனால், தங்கள் குழந்தைகளைக் கவனிக்கமுடியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையினால், சீனாவில் மக்கள் தொகை குறையத் தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்த வடகிழக்கு மாகாணங்களில் 10.3 சதவிகிதம் மக்கள் தொகை குறைந்துள்ளது.

ஜிலின் மாகாணத்தில் மட்டும் 12.7 சதவிகிதம் மக்கள் தொகை குறைந்துள்ளது. வேலை வாய்ப்புக்காகத் தங்கள் சொந்த மாகாணத்தைவிட்டுத் தொலைதூர இடங்களுக்குச் செல்ல நேர்வதால், தங்களின் திருமணத்தையும் தள்ளிவைக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றவே வங்கிகள் இந்த அதிரடியான திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ளன.

கடந்த மே மாதத்தில்தான் 2 குழந்தைகளுக்குப் பதிலாக 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதியளித்தது.

அதைத் தொடர்ந்து சீனாவில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் ஏதோ ஒருவகையில் மக்கள் தொகையைப் பெருக்க உதவிகள், திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்தி வருகின்றன.

நம்ம நாட்லயும் இப்படிக் கொடுத்தா எப்படி இருக்கும்?