கர்நாடகாவில், சொத்து தகராறில் கை கால்கள் உடைக்கப்பட்ட நபர், நீதி கேட்டு எஸ்.பி. அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம், பிலாகி தாலுகா சோனா கிராமத்தை சேர்ந்தவர் கல்மேஷா ஜோகி. 4 ஏக்கர் நிலத்துக்காக அவரது மனைவி மகாதேவி மற்றும் சகோதரர் சங்கர் ஜித்திமணி ஆகியோர் தாக்கியதில், கல்மேஷா ஜோகிக்கு கை, கால்கள் உடைந்தது.
இதனால் கல்மேஷா ஜோகி, தனக்கு நீதி கேட்டு ஆம்புலன்ஸில் சென்று எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.