மராட்டியத்தை சேர்ந்த பிரபல இந்தி நடிகை பிரியா மராத்தே (வயது 38) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.
புற்றுநோய் காரணமாக கடந்த சில மாதங்களாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரியா மராத்தே நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.