சிவகங்கை அருகே தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சிவகங்கை ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது திடீரென இஞ்சினில் தீ பற்றியது. பேருந்துக்குள் புகை பரவியதும் பேருந்து மேம்பாலத்திலேயே நிறுத்தியதும் பயணிகள் அலறியடித்து இறங்கினர் .

பேருந்து இன்ஜினில் ஆயில் கசிந்து அதிக வெப்பநிலை காரணமாக திடீரென தீப்பற்றியது தெரிய வந்தது. நடத்துநர் பாலமுருகன், ஓட்டுனர் முத்துக்குமார் உள்ளிட்ட அனைவரும் பேருந்து விட்டு இறங்கி தீயை அணைக்க முயற்சித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . இதனால் காளையார் கோவில் சிவகங்கை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related News

Latest News