இளம்வயதில் அசுர வளர்ச்சியை எட்டி பின்னர் அதலபாதாளத்திற்கு சென்று அதிலிருந்து மீண்டு வர முடியாமல், ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் தங்களது கேரியரை முடித்துக் கொள்கின்றனர்.
இதற்கு எடுத்துக்காட்டாக இளம்வீரர் பிரித்வி ஷாவைக் கூறலாம். நன்றாக ஆடிவந்த பிரித்வி ஒருகட்டத்தில் சரியான நேரத்தில் பயிற்சிக்கு வராமல் முரண்டு பிடித்தார். குறிப்பாக பயிற்சியாளர்களை மதிப்பதில்லை என்னும் குற்றச்சாட்டால், அவரின் கிரிக்கெட் கேரியரே ஆட்டம் கண்டு விட்டது.
இதனால் மெகா IPL ஏலத்தில் பிரித்வி ஷாவை ஏலத்தில் எடுக்க, எந்த அணியும் முன்வரவில்லை. என்றாலும் ஷர்துல் தாகூர் போல யாராவது ஒரு வீரருக்கு மாற்றாக எடுக்கப்படுவார், என அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இந்தநிலையில் IPLன் கடைசிக்கட்டத்தில் அவருக்கும் ஒரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. வில் ஜாக்ஸ்க்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி பிரித்வி ஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகத், தகவல்கள் வெளியாகி உள்ளன. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, பிரித்வி மீண்டும் Comeback கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.