சென்னை செம்மஞ்சேரி போலீஸார் இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பான வழக்கில் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த வினித்குமார்(27), சரவணகுமார்(25), என்ற இருவரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள தாம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது இருவரில் வினித்குமார் என்பவர் காவல்துறை பாதுகாப்பில் இருந்து தப்பியோடிவிட்டார்.
தப்பியோடிய கைதி வினித்குமாரை செம்மஞ்சேரி போலீஸார் தேடி வந்த நிலையில் தற்போது மதுராந்தகத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த வினித்குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கைதி தப்பியோடி பிடிபட்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.