சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் பீர் பாட்டிலால் தாக்கி அங்கிருந்தவரின் செல்போனை ஒரு நபர் பறித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பார்த்திபன் என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பார்த்திபனை கோயம்பேடு காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்த கைதி பார்த்திபன் நேற்று இரவு தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தப்பியோடிய கைதி பார்த்திபனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
