சேலம் மத்திய சிறையில், 1,300க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்குரிய பணத்தை சிறை கணக்கில் வரவு வைக்காமல் சிறை வார்டன் சுப்பிரமணியம் (வயது 34) என்பவர் முறைகேடு செய்துள்ளார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் GPay மூலம் பண பரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது.
அந்த GPay அக்கவுண்ட் சுப்பிரமணியத்தின் மாமியாரின் அக்கவுண்ட் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் 1.80 லட்சம் ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரமணியத்தை, ‘சஸ்பெண்ட்’ செய்து, சிறைத்துறை எஸ்.பி., வினோத் நேற்று உத்தரவிட்டார்.