சேலத்தில் போலி ரசீதை கணக்கில் சேர்த்து, பணமோசடியில் ஈடுபட்ட சங்ககிரி சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத், சங்ககிரி கிளை சிறைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறை கண்காணிப்பாளர் தனலட்சுமி மீது, கைதிகள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.
கடந்த ஆறு மாதமாக முட்டை, கீரை வழங்கவில்லை என்றும் மூன்று வேலையும் சாம்பார் மட்டுமே வழங்குவதாகவும் குற்றச்சாட்டினர். அதே நேரத்தில் கைதிகளுக்கு முட்டை, கீரை வழங்குவதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விசாரணையில், கண்காணிப்பாளர் தனலட்சுமி போலி ரசீதை தயாரித்து கணக்கில் சேர்த்து, பணமோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சங்ககிரி சிறை கண்காணிப்பாளர் தனலட்சுமி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
