Monday, July 28, 2025

திரைப்படங்களை பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டால் சிறை தண்டனை

புதிதாக வெளியாகும் திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து வெளியிடுவதை திரைப்பட சட்டத்தின் 6ஏஏ மற்றும் 6ஏபி பிரிவுகள் தடை செய்கின்றன. சினிமா திருட்டுக்கு எதிரான சட்டப்பிரிவுகளை வலுப்படுத்துவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில் அனுமதி இல்லாமல் திரைப்படங்களை பதிவு செய்து வெளியிடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 3 மாதம் சிறை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்த சிறை தண்டனை 3 ஆண்டுவருக்கும், அபராதம் படம் தயாரிப்பு செலவில் 5 சதவீதம் வரைக்கும் அதிகரிக்கக்கூடும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News