79-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது.
79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
இன்று நமது சாதனைகளை கொண்டாடும் நாள், 140 கோடி மக்களும் பெருமைப்படக் கூடிய திருவிழா. பல சவால்களை எதிர்கொண்டு, 1947ல் நமது நாடு சுதந்திரம் பெற்றது இது பெருமை மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட கூட்டு சாதனைகளின் தருணம். தேசம் ஒற்றுமையின் உணர்வைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. 140 கோடி இந்தியர்கள் உற்சாகத்துடன் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.