மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதேயி, குகி சமூகத்தினர் இடையே இனக் கலவரம் மூண்டது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். பல மாதங்களாக வன்முறை நீடித்ததால் கடந்த 2025 பிப்ரவரியில் பாஜகவை சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் பதவி விலகினார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் யும்நம் கேம்சந்த் சிங் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது.
