தங்க அட்டை (கோல்டு காா்ட்) குடியுரிமைத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இந்த திட்டத்தின் கீழ், நிரந்திர குடியுரிமை பெற தனிநபர் விண்ணப்பித்தால் ரூ. 8.80 கோடி கட்டணமாகவும், நிறுவனங்கள் சார்பில் பணியாளர்களுக்கு விண்ணப்பித்தால் ரூ. 17.6 கோடி கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டிரம்ப் செய்தியாளர்களுடன் பேசியதாவது: “இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி அடையும் என நாங்கள் நம்புகிறோம். இதன்மூலம் கோடிக்கணக்கான டாலர்களை திரட்டப் போகிறோம். இது, மக்களின் வரிகளை குறைக்க உதவும், பிற நல்ல விஷயங்களைச் செய்ய உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.