சவூதியின் ரியாதில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது : இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது.
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சிரியா பின்னடைவை சந்திக்க அவை ஒரு முக்கிய பங்காற்றின. ஆனால் இப்போது சிரியா முன்னேற வேண்டும் என்பதால் அந்த தடைகளை நீக்க உத்தரவிடுகிறேன்.
சிரியாவிற்கு முன்னேறும் நேரம் வந்துவிட்டது. சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும். இவ்வாறு டிரம்ப் பேசினார்.