குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கேரளாவுக்கு வருகை தந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்டிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் போலீசாரை பார்த்து சற்றும் பயப்படாமல் சாதாரணமாக கடந்து சென்றனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதையடுத்து KL 06 J 6920 என்ற பதிவு எண்ணைக் கொண்ட அந்த மோட்டார் சைக்கிள் பின்னர் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மூன்று நபர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
