Thursday, May 8, 2025

அரசு மருத்துவமனை கழிவறையில், கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

வேலூர் அரசு மருத்துவமனை கழிவறையில், கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அருப்புமேடு பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரின் மனைவி கீர்த்தனா. இவர் 2 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், வலிப்பு மற்றும் வயிற்றுவலி காரணமாக, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து அறிந்த கணவர் தினேஷ், காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Latest news