பிலிப்பைன்ஸ் செபு மாகாணத்தில் உள்ள சுமார் 90,000 மக்கள் வசிக்கும் கடலோர நகரமான போகோ நகரில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் வீடுகளும், கட்டடங்களும் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 69 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. நகரங்கள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகள் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது.