Wednesday, February 18, 2026

பிரபல பாடகர் சிங்கப்பூரில் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அசாமை சேர்ந்த ஜுபின் கார்க் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது இசை நிகழ்ச்சி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் வடகிழக்கு வழாவில் (North East Festival) கலந்து கொள்வதற்கான ஜூபின் கார்க் சிங்கப்பூர் சென்றிருந்தார்.

இந்த நிலையில் அங்கு சென்றிருந்த அவர் அங்கு ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடலில் நீச்சலில் போது மூச்சுவிடத் திணிறானர்.இதனால் சிங்கப்பூரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக CPR கொடுக்கப்பட்டது. அவரை காப்பாற்ற முயற்சி செய்தபோதிலும், மதியம் 2.30 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது என வடகிழக்கு விழா அமைப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை தெரிவிப்பது மிகுந்த வர்த்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. இது மிகவும் வேதனையான செய்தி மற்றும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

மேலும், தனது எக்ஸ் பக்கத்தில் “இன்று அசாம் தனது விருப்பமான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. ஜுபீன் மாநிலத்திற்கு செய்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். அவர் மிக விரைவாக சென்றுவிட்டார். இது செல்ல வேண்டிய வயது அல்ல” என்று பதிவிட்டிருந்தார்

குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் அதிகமான சம்பளம் பெறும் இசைக்கலைஞராக ஜுபின் கார்க் என்று கூறப்படுகிறது. மேலும், 52 வயதாகும் அவருக்கு கரிமா சைக்கியா என்ற மனைவி இருக்கிறார்.

Related News

Latest News