Space X, டெஸ்லா நிறுவனங்களோடு சேர்த்து முக்கிய சமூகவலைதளமான ட்விட்டரையும் தன் வசமாக்கிய எலான் மஸ்க் சிக்கும் சர்ச்சைகள் ஓய்ந்த பாடில்லை.
எலானின் அதிரடி நடவடிக்கைகள் ட்விட்டரில் குழப்பமான சூழலை ஏற்படுத்தி வந்த நிலையில், பிரபல fashion நிறுவனமான Balenciaga ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளது.
பாரிஸை மையமாக கொண்ட இந்நிறுவனம் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் followersஐ கொண்டிருந்தது. இந்நிலையில், Balenciaga திடீரென தனது ட்விட்டர் கணக்கை delete செய்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
தனி ஒரு உரிமையாளராக எலான் அதிகபட்ச அதிகாரத்தை கையில் எடுத்து, அடுத்தடுத்து அதிரடி காட்டி வருவது corporate நிறுவனங்கள் மற்றும் முக்கிய பிரபலங்களுக்கு நிலையற்ற சூழலை கொண்டு வந்துள்ளதால், எலானின் தன்னிச்சையான முடிவுகளுக்கு எதிர்ப்பு வலுக்க தொடங்கியுள்ளது.