Thursday, December 26, 2024

இவ்ளோதாங்க பொன்னியின் செல்வனோட கதை!

மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது.

புதினத்தை படிக்காமல் நேரடியாக படம் பார்த்தாலும் குறை இல்லை என்றாலும் கூட, சோழர்களின் பிரம்மாண்டத்தை பல பரிமாணங்களில் காட்டியுள்ள மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை புரிந்து கொள்ள, கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வனை தெரிந்து கொள்வது அவசியம்.

வரலாற்று கதாபாத்திரங்களை வைத்து புனையப்பட்ட ஒரு வரலாற்று புதினமாக பார்க்கப்படவேண்டிய பொன்னியின் செல்வன் கதையில், கற்பனை கதாபாத்திரங்களும் அதிகம்.

சோழ ராஜ்யத்தின் மன்னராக இருந்த சுந்தர சோழர், உடல்நிலை குறைவுபட்டு அவரை பாதுகாக்கும் சின்ன மற்றும் பெரிய பழுவேட்டரையரை தவிர வேறு யாராலும் பார்க்க முடியாத பாதுகாப்பு கட்டுப்பாட்டில்  தலைநகரான தஞ்சையில் இருக்கிறார்.

பெரிய பழுவேட்டரையரின் மனைவியான நந்தினி தேவி, சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்த கரிகாலன் ஆட்சிக்கு வருவதை தடுத்து, மதுராந்தகனை மன்னனாக்க சூழ்ச்சி புரிகிறாள்.

இதேதும் தெரியாத ஆதித்த கரிகாலன் காஞ்சிபுரத்தில் தனது பெற்றோருக்காக தங்க கோட்டையை கட்டி வருகிறான். முதலில் தன் தந்தையை காஞ்சிபுரத்துக்கு அழைத்து வரவும் பின் தன் தங்கை குந்தவையிடம் ரகசிய தகவல் ஒன்றை கொண்டு சேர்க்கவும் கரிகாலன், வல்லவராயன் வந்தியத்தேவனை அனுப்புகிறான்.

அதைத் தொடர்ந்து, பயணத்தில் புதிய புதிய சவால்களை சந்திக்கும் வந்தியத்தேவனை சுற்றி சுழல தொடங்கும் கதைக்களம் , அருள்மொழி வர்மன் ஈழத்தை கைப்பற்ற சென்ற போது, பாண்டியர்கள் தஞ்சையில் ஊடுருவவதில் தீவிரமடைவதே கதைச்சுருக்கம்.

மன்னர் கால திரைப்படமாக இருந்தாலும் போர்காட்சிகளில் கவனம் செலுத்தியதை விட, மணி ரத்னம் கதாபாத்திரங்களுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news