தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த வில்லன் நடிகர்களில் பொன்னம்பலத்துக்கு தனியிடம் உண்டு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பறந்து, பறந்து சண்டை போட்ட பொன்னம்பலம் இன்று வீல்சேரில் முடங்கி இருக்கிறார்.
உடல்நலக்குறைவால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருவதாக, கடந்தாண்டு பேட்டியொன்றை அளித்தார். அப்போது தன்னுடைய சிகிச்சைக்கு உதவி செய்த நடிகர்கள் பலருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அப்போது அந்த வீடியோ மிகப்பெரிய வைரலானது.
இந்தநிலையில் அவரின் சமீபத்திய வீடியோ ஒன்று வெளியாகி, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில் வீல்சேரில் அமர்ந்தபடியே டான்ஸ் ஆடுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. இப்படி அவரை பாக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு,” இவ்வாறு தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
