பொங்கல் பரிசுத்தொகை., இந்த முறை இவ்வளவு ரூபாயா?

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசு இம்முறை பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் சேர்க்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் தீவிரமாகப் பேசப்படுகிறது.

கடந்த ஆண்டு (2025) பொங்கலில் ரூ.1000 ரொக்கம் இல்லாமல், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மட்டுமே வழங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதற்கு முன் 2023, 2024ல் ரூ.1000 ரொக்கமும் சேர்க்கப்பட்டது, 2022ல் 21 மளிகைப் பொருட்கள் கொடுக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் 2021ல் அதிகபட்சம் ரூ.2500 வரை ரொக்கம் வழங்கப்பட்டது.

இப்போது 2026 தேர்தல் சூழலில் அரசு ரொக்கத் தொகையை கூட்டி, ரூ.5000 வரை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

Related News

Latest News