Tuesday, May 13, 2025

பொள்ளாச்சி வழக்கு : கைதான 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன்(வயது 30), வசந்தகுமார்(32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 9 பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது. கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். 12 மணிக்கு பின்னரே தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news