2024-2025ம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது. இதில் அனைவரும் எதிர்பார்த்தது போல ஷ்ரேயாஸ் அய்யருக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது. எதிர்பாராவிதமாக இஷான் கிஷனும் இடம் பிடித்துள்ளார்.
A+ பிரிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா நால்வரும் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் நால்வருக்கும் ஆண்டு ஊதியமாக வருடத்திற்கு 7 கோடி ரூபாய் வழங்கப்படும். இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிவரும் ஆல்ரவுண்டர் ஜடேஜா, A+ பிரிவில் இடம் பெற்றது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ரசிகர்கள், ”ஜடேஜாவை காட்டிலும் முஹமது ஷமி, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால் சில மாதங்களுக்கு முன், பாஜகவில் இணைந்த ஜடேஜாவிற்கு A+ பிரிவு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏதேனும் அரசியல் தலையீடு உள்ளதா?,” என, சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.