போதைப்பொருள் வழக்கு : நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்

போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள ஸ்ரீகாந்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கிருஷ்ணாவையும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் கிருஷ்ணா கழுகு, வானவராயன், வீரா, வன்மம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News