தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் அருகே தனது காரில் சென்ற போது முன்னாள் வாலிபர் சென்ற பைக் மீது மோதியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், காந்தி ராஜனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் மீது காரை ஏற்றியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து உதவி ஆய்வாளர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
