புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தியை கைது செய்யும் பொருட்டு, அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினரும், புரட்சி பாரதம் கட்சி தலைவருமான ஜெகன் மூர்த்தியை காதல் விவகாரத்தில் ஆள் கடத்தல் புகாரில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே, ஜெகன் மூர்த்தி தரப்பு முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனால் ஜெகன் மூர்த்தியை கைது செய்ய வேகம் காட்டும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது.