டெல்லியில் வரும் பிப்ரிவரி 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணம், பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 47 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.