மகாராஷ்டிரா மாநிலம் மின்சார ரயிலில் போலீசார் ஒருவர் பெண் பயணிகளிடம் ரகளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரிவிலியில் இருந்து விரார் நோக்கி சென்ற மின்சார ரயிலில் மகளிர் பெட்டியில் போலீசார் ஒருவர் எறியுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருப்பதை பெண் பயணிகள் அறிந்தனர்.
பெண் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை நடத்துவதாக கூறி அங்கு நின்று கொண்டிருந்த பெண் பயணிகளின் உடலை தொட்டு மானபங்கம் செய்தார். இதனை கண்ட சில பெண் பயணிகள் அவரது நடவடிக்கையை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பயணிகள் கொடுத்த புகாரின் பெயரில் ரயில்வே போலீசார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் அமோல் சப்காலே என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.