Monday, December 29, 2025

கரூர் சம்பவத்திற்கு காவல்துறைதான் காரணம் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வலக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்துள்ளார்.

கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையே காரணம் என்றும், உள்ளூர் அரசியல்வாதிகள், குண்டர்கள் இணைந்து செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

Related News

Latest News