Sunday, April 20, 2025

721 கிலோ கஞ்சா போதை பொருட்கள் : தீயிட்டு அழித்த காவல்துறை

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், 721 கிலோ கஞ்சா போதை பொருட்களை காவல்துறையினர் தீயிட்டு அழித்தனர்.

கஞ்சா போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில், காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை எஸ்.பி அரவிந்த் தலைமையில், மதுரை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 721 கிலோ கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கஞ்சா பொருட்களை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ஏமன்குளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வைத்து காவல்துறையினர் தீயிட்டு எரித்தனர்.

Latest news