Thursday, April 24, 2025

பைக்கில் வித்தை காட்டிய இளைஞர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்

கன்னியாக்குமரி மாவட்டம் கலியக்காவிளை பகுதியில் நான்கு வாலிபர்கள் சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சாகசத்தில் ஈடுபட்டனர். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து இஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவு செய்தனர்.

இதுகுறித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் 4 இளைஞர்களையும் கைது செய்து 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Latest news