பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள், கேஒய்சி (KYC) விவரங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கை பயன்படுத்தாமல் வைத்திருந்தால், உடனடியாக அருகிலுள்ள வங்கிக் கிளைக்கு சென்று கேஒய்சி செயல்முறையை நிறைவேற்ற வேண்டும். கேஒய்சி புதுப்பிக்கப்படாத கணக்குகள் ஏப்ரல் 15க்குள் மூடப்படும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த தகவல் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியிலிருந்து குறுந்தகவல் (SMS) மூலமாகவும் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கேஒய்சி செயல்முறையை நிறைவேற்றாத கணக்குகள் எந்த கூடுதல் அறிவிப்பும் இல்லாமல் 2026 ஏப்ரல் 16 முதல் முடக்கப்படும் என்றும் வங்கி எச்சரித்துள்ளது.
