பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் சென்ற வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியிருந்தார். இதற்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பதிலளித்தார்.
அதில் அவர் கடந்த 2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மேற்கொண்ட 38 வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வழங்கினார். கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணங்களுக்காக சுமார் ரூ.258 கோடி செலவானதாக கூறினார்.
முக்கியமாக, 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதற்கான செலவு ரூ.22.89 கோடி என கூறப்பட்டு இருந்தது.