Thursday, March 13, 2025

புல்வாமா தாக்குதல் – உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி !

ஜம்மு -ஸ்ரீநகர் நெடுசாலையின் புல்வாமா பகுதியில் கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர் . இந்த தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்தியாவை கவலையில் ஆழ்த்தியது.

மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர்கள் உயிரிழந்து 6 வருடம் ஆகிய நிலையில், வீரர்களுக்கு 6 ம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவு அஞ்சலி பிரதமர் மோடி செலுத்தியுள்ளார். அரசியல் தலைவர்களும் நினைவு அஞ்சலி செலுத்தி வந்தனர். புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த படை வீரர்களுக்கு பிப்ரவரி 14 தேதியான இன்று மரியாதையும் , அஞ்சலியும் செலுத்திகிறேன் என்று கூறியுள்ளார். இவ்வீரர்களின் தியாகத்தையும் அற்பணிப்பையும் வருங்கால தலைமுறைகள் மறக்க மாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

Latest news