Tuesday, January 13, 2026

நாடு முழுவதும் BSNL 4G சேவை : பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(சனிக்கிழமை) தொடக்கிவைத்தார். இதன் மூலம் 1 லட்சம் 4ஜி மொபைல் கோபுரங்கள் இன்று பயன்பாட்டுக்கு வருகின்றன.

பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒடிசாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, சுதேசி 4ஜி சேவையையும் இன்று காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.

உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் 5-ஆவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.

Related News

Latest News