டெல்லிக்கு செல்ல வேண்டிய விமானம், நடுவானில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அவசர, அவசரமாக ஜோத்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
மும்பையில் இருந்து டெல்லி நோக்கி ஏர்இந்தியா விமானம் சென்றது. அப்போது நடுவானில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமான நிலையத்தில், பயணிகள் விமானம் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.