தென் கொரியாவில் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு புறப்பட இருந்த விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் இருந்த 169 பயணிகள், 6 பணியாளர்கள் மற்றும் ஒரு பொறியாளர் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பயணிகள், ஊழியர்கள் என அனைவரும் அவசரகால எஸ்கேப் ஸ்லைடு மூலமாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.