Saturday, April 19, 2025

‘PhonePe’ ‘Gpay’ போன்ற ‘UPI’ யூசர்களுக்கு பேரிடி! ₹2000 UPI பரிமாற்றத்திற்கு அதிரடி GST!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகளின் மூலம் வங்கிக்கு செல்லாமலே பணத்தை எளிதில் அனுப்பும் நடைமுறை மிகவும் பொதுவானதாகி விட்டது. நம்மிடம் பணம் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. கடையில், மருத்துவமனையில், பஸ் ஸ்டாப்பிலேயே கூட QR ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதி இன்று எங்கும் வழக்கமானதுதான்.

ஆனால், இந்நிலையில் யுபிஐ பரிமாற்றங்களுக்கு வரி விதிக்க மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, யுபிஐ மூலம் ரூ.2,000-ஐத் தாண்டும் பரிமாற்றங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இதுவரை இலவசமாக இருந்த யுபிஐ பரிவர்த்தனைகள் இனிமேல் கட்டணத்துடன் அமையப்போகிறதா என்ற கவலை பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அரசு தரப்பில் பரிசீலனை செய்யப்படும் முக்கியமான யோசனை ஒன்று – ஒருவர் தனது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர், நண்பர்களுக்கு பணம் அனுப்பும் பொழுது அந்த பரிமாற்றத்திற்கு எந்தவிதமான வரியும் விதிக்கப்படாது. ஆனால், வணிக ரீதியாக நிகழும் பரிமாற்றங்கள் – உதாரணத்திற்கு, கடையில் பொருள் வாங்கும் போது பணம் செலுத்துவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது செலுத்துவது போன்ற பரிமாற்றங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த திட்டம் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், இறுதி முடிவை நிதி அமைச்சர் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

இந்நிலையில், பல அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் இந்த முடிவை “டிஜிட்டல் இந்தியா” திட்டத்திற்கு எதிரான யூ-டர்ன் என விமர்சித்திருக்கிறார். அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, “இது நாட்டின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நேரத்தில் பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு வரிகளைச் சந்தித்து வருகின்றனர். வருமான வரி, சேவை வரி, பொருட்கள் வாங்கினால் ஜிஎஸ்டி – இவற்றோடு கூட இப்போது யாருக்காவது பணம் அனுப்பினாலும் வரி கட்ட வேண்டுமா என்பதே மக்கள் மத்தியில் எழும் மிகப்பெரிய கேள்வியாகியுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அதற்கு எதிரான எதிர்வினைகள் எப்படி இருக்கும்? மக்களின் வாழ்க்கையே இது மூலம் பாதிக்கப்படுமா? அல்லது அரசு ஒரு சமநிலை முடிவை எடுக்குமா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

Latest news