ஜப்பானில் உள்ள மெக் டொனால்ட் உணவகம் ஒன்றில் செல்போன்களை சுத்தம் செய்யும் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. வோஷ் என அழைக்கப்படும் இந்த எந்திரத்தின் உதவியால் முப்பதே நொடிகளில் phone sanitize செய்யப்பட்டு 99.9 சதவீதம் வரை கிருமிகளை அழிப்பதாக கூறப்படுகிறது.
வோட்டா நிறுவனம் தயாரித்துள்ள இந்த எந்திரம் hydrological cycle மற்றும் ஆழமான புற ஊதா கதிர்கள் கொண்ட தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுகிறது.
சாதாரணமாக, கை கழுவுவதற்கான sink போல தோற்றம் அளிக்கும் இந்த நவீன எந்திரம் எளிதில் கையாள கூடிய வகையில் இருப்பது கூடுதல் சிறப்பு. செல்போனை சுத்தம் செய்யும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.